2025 செப்டெம்பர் 06, சனிக்கிழமை

மனைவியை கொன்ற கணவன் கைது

Editorial   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவனை கைது செய்துள்ளதாக கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளின் தாயான ஆறுமுகன் அம்பிகா (வயது 57) என்பவரே பலியாகியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான அவரது 22 வயது மகனும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பொலிஸார்  பிரிவில் உள்ள மோதர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசிக்கும் சந்தேக நபரால் கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் காயமடைந்த அவரது மகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு அறையில் தரையில் மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மூத்த மகனும் சந்தேக நபரும் அடுத்த அறையில் தங்கியிருந்ததாகவும்  பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுக்கு அதிக அடிமையான சந்தேக நபர், தனது மனைவி தூங்கும் இடத்திற்கு வந்து, வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவத்தைத் தடுக்க தலையிட்ட தனது மகனையும் சந்தேக நபர் கத்தியால் குத்திவிட்டு, பின்னர் தப்பிச் சென்றதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .