Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக மக்கள் முன்னணி எதிர்வரும் முதலாம் திகதி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகமை ஜகத் வரவேற்பு மண்டபத்தில், பொதுக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
பண்டாரகம அமைப்பாளரும் முன்னாள் ஜக்கிய மக்கள் முன்னணி களுத்துறை மாவட்ட வேட்பாளருமான மரியதாஸ் எண்டனி ஜெயசீலனின் ஏற்பாட்டில் நடைபெறும் இப் பொது கூட்டத்தில், பல வருடங்களாக களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, பின்தங்கிய நிலையில் அரசியல் அனாதைகளாக வாழ்ந்துவரும், சிறுபான்மை தமிழ் மக்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு சுபீட்சமானதோர் எதிர் காலத்தையும் அரசியல் அங்கீகாரத்தையும் உருவாக்கும் பணியின் ஓர் அங்கமாக, களுத்துறை மாவட்ட ஜனநாயக மக்கள் முன்னணி தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் தேர்வு என்பன இதன்போது இடம்பெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .