Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
என் ஜெயரட்ணம்
கடலரிப்புக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள, களுத்துறை- கெலிடோ கடற்கரையை, சுமார் 889 மில்லியன் ரூபாய் செயலில் புனர்நிர்மாணம்செய்ய, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டென்மார்க் ரூடி நீல்சன் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தலைமையில், கடந்த மாதம் 29 ஆம் திகதி புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
களுத்துறை வடக்குப் பகுதியில், களு-கங்கையும் கடலும் சங்கமமாகும் கழிமுகத்தில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த பைனஸ் மரங்களுடன் கூடிய எழில் மிகு "கெலிடோ" கடற்கரை, கடந்த 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கின்போது, மண்மேடுகள் உடைந்து கடலில் மூழ்கியதுடன் கரையோரப் பகுதிகள் கடலரிப்புக்குள்ளாகின.
இதனைத் தொடர்ந்து, கடந்த அரசாங்கம்,கெலிடோ கடற்கரையை பாதுகாக்கும் நோக்கில், தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட 80 மில்லியன் ரூபாயை உரிய முறையில் பயன்படுத்தாது அசமந்த போக்கில் செயற்பட்டதன் விளைவாக, இப் பகுதியில், 35 ஏக்கர் நிலப்பரப்பு, கடலரிப்புக்குள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடல்வள பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதுடன், சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் இதனைப் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இரத்மலானை, கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளில், கடற்கரையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சுற்றாடல் துறை அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
38 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
2 hours ago