2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மும்தாஜ் படுகொலை ஜோடிக்கு விளக்கமறியல்

Editorial   / 2021 நவம்பர் 07 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்தை தொடர்மாடியில் வசித்து வந்த நிலையில், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட, 44 வயதான பாத்திமா மும்தாஜின் படுகொலைத் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மட்டக்குளியைச் சேர்ந்த ஜோடியை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மட்டக்குளியைச் சேரந்த கணவனும் மனைவியும், மஹர பதில் நீதவான் முன்னிலையில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, அவ்விருவரையும் 48 மணிநேரம் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறும். நாளையதினம் (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாளிகாவத்தை பாத்திமா மும்தாஜ், வியாழக்கிழமை (04) பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தை கணவன் அடையாளம் காட்டினார்.

அதனையடுத்தே, மட்டக்குளிய சமித்புரவைச் வசிப்பிடமாகக் கொண்ட 46   (06) கைது செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .