Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரிடமிருந்து 100 மில்லயன் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாகக் கோரி, களனி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற பிரசவத்தின் போது, அறுவை சிகிச்சையின் பின்னர் வயிற்றில் பஞ்சு வைத்துத் தைக்கப்பட்டமைக்கு எதிராகவே நஷ்டஈடு கோரியுள்ளார்.
வயிற்றின் அடி பாகத்தில் அதிக வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தனக்குப் பிரசவம் பார்த்த வைத்தியரிடம் சென்று இது தொடர்பாக தெரிவித்த போது, அவர் எவ்விதமான சிகிச்சையும் மேற்கொள்ளமல் வலி நிவான மாத்தரையை தனக்கு வாங்கியதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர், வேறொரு தனியார் வைத்தியசாலைச் சென்று, ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த போதே வயிற்றில் பஞ்சு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago