Princiya Dixci / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிஸை, போமிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டு ரிவோல்வர் வைத்திருந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அவிசாவளை மற்றும் கடுவெல பகுதியை சேர்ந்த 22, 33 மற்றும் 39 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 12ஆம் திகதி ரொயல் பார்க் சமூக மண்டபத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவத்துடன் குறித்த நபர்கள் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை, கல்கிஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .