2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி பாரிய நிதி மோசடி

Princiya Dixci   / 2016 நவம்பர் 17 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பாரிய நிதி மோசடி செய்த நபரொருவரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரால் 40 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், இவருக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் 275க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபர் இரண்டு வருடங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாதிருந்த நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக, விசேட விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X