Editorial / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, நீர்கொழும்பு கட்டுவ புவகவத்தை பிரதேசத்திலுள்ள பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மேற்படி பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் 'தெபா எல' வாவியில், சட்டவிரோதமாக தனிநபர் ஒருவர் கட்டி வரும் பாலம் ஒன்றின் காரணமாக தற்போது இந்த நிலை ஏறபட்டுள்ளதாகவும் பாலத்தின் கீழ குப்பைகள் சேர்ந்துள்ளதன் காரணமாக, நீரோட்டம் தடைப்பட்டுள்ளமையும் இதற்குக் காரணமாகுமென, பிரதேசவாசிகள் குற்றஞ்சான்றுகின்றனர்.
ஐந்து வீடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகளில் உள்ளவர்கள் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக, வெளியில் செல்ல முடியாத நிலை எற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் எனைய வீடுகளும் பாதிக்கப்படும் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 minute ago
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
23 minute ago
1 hours ago