2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

றோலர் வலை மீன் பிடியில் ஈடுபட்ட குருநகர் மீனவர்கள் 10 பேர் கைது

Super User   / 2012 ஜனவரி 12 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடா கடலில் மூன்று றோலர் பொட்டம் மடி எனும் வலையை பயன்படுத்தி ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்களை கொழும்பில் இருந்து வந்த மீன்பிடி மற்றும் நீரியல் திணைக்கள அதிகாரிகளினால் இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்

யாழில் ஆழ்கடலில் ஈடுபட்டு குருநகர் இறங்குதுறையூடாக கரைநோக்கி வந்தபோதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ். பிராந்திய நீரியல் வள திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

இந்த மீனவர்கள் மேற்படி வலையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர்களின் சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு நீரியல் வள திணைக்கள அதிகாரி றோகித சாலம் தெரிவித்துள்ளார்.

குருநகர் மீனவர்கள் இன்று மாலை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பிராந்திய நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் எஸ். ரவீந்திரன் கூறினார்.

கொழும்பில் இருந்து வந்த நீரியல் திணைக்கள அதிகாரிகளிடம் வட கடல் மீனவர்கள் றோலர் வலையை பயன்படுத்தி தொழில் செய்வதை பிடிக்கிறீர்கள்.  இந்திய மீனவர்கள் வட கடலுக்குள் வந்து றோலரில் மீன் பிடித்து செல்கிறார்களே அதை ஏன் உங்களால் பிடிக்க முடியாது? எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது, 'இந்திய றோலர்களைப் பிடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் ஏன் இந்திய றோலரில் மீன்பிடிக்கவர்களைப் பிடிக்க வேண்டும்? அவர்களை பிடிக்க வேண்டியது எங்களுடைய வேலை இல்லை' என கொழும்பு நீரியல் வளத் துறைத் திணைக்கள அதிகாரி றோகித சாலாம் பதிலளித்தார்.

இதேவேளை, யாழ். குடா கடலில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களைக் கொழும்பில் இருந்து வந்த நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து கைது செய்தமை மீனவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக அமைந்துள்ளது என யாழ். குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி  சங்க தலைவர் எஸ்.பிறேமன் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை மீன்பிடியில் ஈடுபட்டு கரை திரும்பிய மீனவர்களை அடிப்படை மனித தன்மையில்லாமல் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் ஒரு கொலைகரங்களை மாதிரி அழைத்துச் சென்றமையை தாம் எதிர்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மீனவர்களின் நலன்கள் பாதுகாப்பப்ட வேண்டும். அவர்கள் தங்கள் உடல்களைக் கழுவுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X