2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெற்றோல் விற்பனை நிலைய கொள்ளை சந்தேக நபருக்கு 13ஆம் திகதிவரை விளக்கமறியல்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

பெற்றோல் விற்பனை நிலைய உரிமையாளரை தாக்கி விட்டு பணத்தினை கொள்ளையடித்த இளைஞரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள பெற்றோல் விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் வேலணைப் பகுதியைந் சேர்ந்த நபரொருவரை அன்றை தினம் பொலிஸார் கைது செய்தனர். குறித்த பெற்றோல் விற்பனை நிலையத்திற்கு சென்று உரிமையாளரை தாக்கிவிட்டு 15,500 ரூபா பணத்தினை கொள்ளையடித்ததாக குற்றஞ் சாட்டப்பட்டு யாழ். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரினை இன்று வெள்ளிக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

மேற்படி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா குறித்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X