2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

யாழில் போதை பொருள் தொடர்பான வழக்குகளில் சுமார் 16 லட்சம் ரூபாய் வசூல்

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

யாழ். மதுவரி நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 601 மதுபான வழக்குகளினூடாக 16,64,300 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.செந்தூர்செல்வன் நேற்று தெரிவித்தார்.

கடந்த வருடம் 2012 ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்துறை பிரதேசங்களில் 601 மதுபான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

இதில், 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 371 வழக்குகளும் சட்டவிரோதமாக கள்ளு வைத்திருந்த 123 வழக்குகளும் அனுமதியின்றி கள்ளு விற்பனை செய்த 59 வழக்குகளும் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் 9 வழக்குகளும் கசிப்பு விற்பனை தொடர்பில் 1 வழக்கும் உட்பட ஏனைய மதுபான குற்றங்களில் 38 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வர்த்தகர்கள் யாழ். மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளையில்,  நீதிமன்றினால் தண்டப்பணமாக  ரூ. 16,64,300 அறவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X