2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கொழும்பு – யாழ் ரயில் சேவை; 4 நாட்களில் ரூ.18 இலட்சம் வருமானம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மூலம், கடந்த நான்கு நாட்களில் 18 இலட்சத்து 31 ஆயிரத்து 765 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கூறினார்.

ரயில் சேவையின் முதல் நாளான 14ஆம் திகதி 3 இலட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், 15ஆம் திகதி - 6 இலட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபாவும், 16ஆம் திகதி - 4 இலட்சத்து 8400 ரூபாவும், 17- ஆம் திகதி 4 இலட்சத்து 42 ஆயிரத்து 840 ரூபாவும் வருமானமாக கிடைத்துள்ளன என்று அவர் கூறினார்.

கடுகதி (இன்ரசிற்றி), குளிரூட்டப்பட்ட கடுகதி, யாழ்தேவி, தபால் ரயில் ஆகிய 4 ரயில்கள் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவற்றில் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலின் இருக்கைகளுக்கான கேள்வி அதிகமாகவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .