2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தீபாவளியால் யாழ்.மாநகர சபைக்கு ரூ. 10 இலட்சம் வருமானம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

தீபாவளி பண்டிகைக்காக மாநகர எல்லைக்குள் கடைகள் அமைக்க இடங்கொடுத்து பெற்ற வாடகைகள் மூலம் யாழ்.மாநகர சபைக்கு 10 இலட்சத்து ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பண்ணைப்பகுதி மற்றும் புல்லுக்குளத்தை அண்மித்த பகுதிகளில் தீபாவளி கடைகள் அமைப்பதற்கு அனுமதியளித்திருந்தோம்.

கடைகள் அமைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தென்னிலங்கை வியாபாரிகள் ஆவார்கள்.
10 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட கடை அமைப்பதற்கு 15 ஆயிரம் ரூபாய் வாடகை அறவிடப்பட்டது.

மழை காரணமாக வியாபாரம் இடம்பெறாத சில வியாபாரிகளிடம் வாடகைகள் அறவிடப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .