2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மல்லாவி வீதியினை மீள அமைக்க 458 மில்லியன் ரூபா தேவை

Super User   / 2014 ஜூன் 27 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு மல்லாவி பிரதான வீதியினை மீள அமைப்பதற்கு 458 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்ட பதில் பணிப்பாளர் ரி.கே.ஐங்கரன் இன்று வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்ட மேற்படி வீதியானது அப்பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களைவிட 4 அடி அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனால், வீடுகளிலிருந்து வீதிக்கு ஏறுவது மலைகளில் ஏறுவது போல சிரமமாகவிருப்பதாகவும், இவ்வாறு வீதிகள் இருப்பதினால் வாடிக்கையாளர்கள் வேறு கடைகளில் பொருட்களை வாங்குவதாகவும் அப்பகுதி வர்த்தகர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், குறித்த பிரதான வீதியை சாதாரண போக்குவரத்தினை மேற்கொள்ளும் வகையில் சமதரை வடிவமைப்பு பாதையாக அமைத்து தருமாறு கோரி அப்பகுதி வாழ் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் இது தொடர்பாக குறித்த வீதி மாற்றியமைத்துத் தரும்படி கோரி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் மகஜர் அனுப்பியிருந்தனர்.

இது தொடர்பான ஆராய்வுகளை இருவரும் மேற்கொண்டு வந்த நிலையிலும் குறித்த வீதி மாற்றியமைப்பது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இவ்வீதியினை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என ரி.கே.ஐங்கரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .