Suganthini Ratnam / 2011 மே 08 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எதிர்வரும் 10ஆம் திகதி யாழ். குடாநாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள மொழிசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாகவே இவரது யாழ். விஜயம் அமைவதுடன், அன்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில் மொழியியல் சார்ந்த அரசாங்க அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஊடவியலாளர்களையும் சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளதாகவும் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் சிங்களமொழியில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் முறைப்பாடுகளை தமிழ்மொழியில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் அரசாங்கத் திணைக்களங்களிலுள்ள அதிகாரிகளுக்கு சிங்களமொழியில் கடிதங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இக்கடிதங்களை தமிழ்மொழியில் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago