2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 11 பேருக்கு 1,10,000 ரூபா தண்டம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 11 பேருக்கு 1,10,000 ரூபா தண்டம் விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.

அத்துடன் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற காலப்பகுதிக்குரிய நட்ட ஈட்டினை மின்சார சபைக்கு வழங்குமாறும் அவர் மேற்படி நபர்களுக்கு உத்தரவிட்டார். 

வல்வெட்டித்துறை பொலிஸாரும் யாழ். மாவட்டத்தின் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய சோதனையின்போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கம்பர்மலை, கெருடாவில், கொம்மாந்துறை, வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 9 பேர் கடந்த 8 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேபோன்று உடுப்பிட்டிப்பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவர் கடந்த 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கைதானவர்கள் புதன்கிழமை (12) பருத்தித்துறை நீதவான் நீதிதமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .