2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உடுவில் மகளிர் கல்லூரியின் 190 ஆண்டு நிறைவு கல்விக் கண்காட்சி

A.P.Mathan   / 2014 ஜூன் 19 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பொ.சோபகா, யோ.வித்தியா


யாழ். மாவட்டம், வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில்  மகளிர் கல்லுரியின் 190ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் முகமாக மாணவிகளின் ஏற்பாட்டில் கல்விக் கண்காட்சியொன்று நேற்று புதன்கிழமை (18) காலை முதல் ஆரம்பமாகியது.

கல்லூரியின் முதல்வர் திருமதி சிரானி மில்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி டி.எஸ்.தியாகராஜா கண்காட்சிக் கூடத்தினைத் திறந்து வைத்தார்.

இக்கண்காட்சியில் மொழியியல், ஊடகம், கலை, கணிதம், விஞ்ஞானம், வரலாறு, சமயம் புவியியல், வர்த்தகம் உள்ளிட்ட 18 துறைகள் சார்ந்த விடயங்கள் காட்சிக் கூடங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் முற்றுமுழுதாக மாணவர்களின் ஆக்கத்தில் உருவாக்கப்பட்ட இக்கண்காட்சியானது தொடர்ந்து 3 தினங்களுக்கு நடைபெறவுள்ளதாக கல்லூரி அதிபர் தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .