2025 ஜூலை 09, புதன்கிழமை

பெண் கைத்தொழில் முயற்சியாளர்களுக்காக ரூ.200 மில்லியன் ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியில் ஈடுபாடு கொண்ட பெண்களுக்கு தொழில் முயற்சி அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கித் தருவதற்கு ஏற்றுக்கொண்டுள்ளார்.

வரவு - செலவுத் திட்டத்தின் பின்னர் ஒதுக்கப்படும் நிதியுதவி மூலமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதாரம் மேம்படக்கூடிய வகையில் தொழில் முயற்சிகளுக்கு உதவவும் அவற்றை அபிவிருத்தி செய்யவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரதேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பாக கடந்த 26ஆம் திகதி, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் தேவானந்தாவுக்கும் நிதி அமைச்சின் செயலாளர் பி.பி ஜெயசுந்தரவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .