2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புதிதாக நியமனம் பெற்ற 24பேர் யாழ். மாநகர சபையில் கடமை பொறுப்பேற்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். கல்வியற் கல்லூரியில் கடந்த திங்களன்று (02) நியமனக் கடிதங்கள் பெற்றவர்களில் 24பேர் யாழ்.மாநகர சபையில் தமக்கான கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

வடமாகாண ரீதியில் 372 பேருக்கு வடமாகாண ஆளுநர் சந்திசிறியினால் நிரந்தர நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இவர்களில் 24பேர் யாழ். மாநகர சபையில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டதுடன், இவர்களில் 22பேர் முகாமைத்துவ உதவியாளர்களாகவும் இருவர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா நியமனம் பெற்றவர்களுக்கான கடமைகளை ஒப்படைத்தார்.

மாநகர சபையிலுள்ள ஒவ்வொரு பிரிவிலும் பணியமர்த்தப்பட்ட இவர்கள் தமது முதல் கடமைகளைச் செய்ய ஆரம்பித்துள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X