2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 240 பேர் ஒரு வாரத்தில் கைது

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

கடந்த ஒருவார காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் சந்தேகத்தின்பேரில் 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காரியாலயம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பொலிஸ் பிரிவில் 155 பேரும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் 85 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த இரண்டு பொலிஸ் பிரிவிலும் 200 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோத மதுபாவனை மற்றும் ஹெரோயின் போன்றனவும் இதற்குள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X