2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடக்கின் வசந்தத்தின் மூலம் 4 கிராமங்களுக்கு மின்சாரம்

George   / 2014 நவம்பர் 16 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன், கி.பகவான்


வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கச்சர்வெளி, செல்வபுரம், வேம்படுகேணி, மற்றும் இத்தாவில் ஆகிய 4 கிராமங்களுக்கு முதன்முறையாக இன்று ஞாயிற்றுக்கிழமை (16) முதல் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கச்சர்வெளி, செல்வபுரம் ஆகிய கிராமங்களுக்கு 18 மில்லியன் ரூபாய் செலவிலும், வேம்படுகேணி, இத்தாவில் ஆகிய கிராமங்களுக்கு 15 மில்லியன் ரூபாய் செலவிலும் மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மின்சார விநியோகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆரம்பித்து வைத்தார்.

இதன் மூலம் 4 கிராமங்களை சேர்ந்த 380 குடும்பங்கள் பயன்பெறுகின்றனர்.

இந்நிகழ்வில் மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன், பளை பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன், வடக்கின் வசந்தம் மின்பொறியியலாளர் எஸ்.விஜயசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .