2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அதிவேக தபால் சேவை 5ஆம் திகதி ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சுமித்தி தங்கராசா


வவுனியாவிலிருந்து பரீட்சார்த்த அதிவேக தபால் சேவை யாழ். அஞ்சல் திணைக்களத்தை இன்று செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.

இந்த நிலையில், புதிய அதிவேக தபால்  சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் 05ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்கள கட்டுப்பாட்டு செயற்பாட்டாளர் வீரசிங்கம் குமரகுரு  தெரிவித்தார்.

அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரட்ணவின் ஆலோசனையின் கீழ்  யாழ்ப்பாணம், வவுனியா, தம்புள்ளை, குருநாகல், அம்பாந்தோட்டை, காலி, இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு  புதிய அதிவேக தபால் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தச் சேவையில் யாழ். மாவட்டத்திற்கு  50 கிராமிற்கு 50 ரூபாவும் வெளிமாவட்டங்களுக்கு 50 கிராமிற்கு 60 ரூபாவும் வெளிமாவட்டங்களுக்கு 50 கிராமிற்கும் கூடுதலான நிறைக்கு 40 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கட்டணம் தொடர்பாக திறைசேரியுடன் கலந்துரையாடிய பின்னர் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், புதிய பொதிகள் பரிமாற்று சேவையினையும் விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பிலிருந்து அனுப்பிவைக்கப்படும் பொதிகள் மற்றும் தபால் சேவைகள் 3 அல்லது 4 மணித்தியாலங்களினுள் உரிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.  இவ்வாறான சேவைகளுக்கு  வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .