2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

யாழில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடிகளில் 87.37 வீதமானவை அகற்றப்பட்டுள்ளன: முருகதாஸ்

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ் மாவட்டத்தில் ஜூலை மாதம் 01ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 87.37 வீதமான பிரதேசங்களில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக பிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 548 இடங்கள் மிதிவெடி அபாயப் பிரதேசங்களாக இனங்காப்பட்டதாகவும் இவற்றில் 504 இடங்களில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாவும் இன்னும் 44 இடங்களில் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் புகையிரதப்பாதை புனரமைப்புப் பணிக்காக ஆனையிறவு தொடக்கம் காங்கேசன்துறை வரையான பகுதிகளிலும் அதனோடு அண்டிய பகுதிகளிலும் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X