2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையத்திற்கு 9 மில்லியன் ரூபா தேவை

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் கமநலசேவைத் திணைக்களத்தினை மீள் நிர்மாணம் செய்வதற்கு 9 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தது.

இறுதி யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்த நிலையில் இருக்கும் கொக்குத் தொடுவாய் கமநல சேவை நிலையத்திலிருந்து தாம் முழுமையான சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியவில்லையென அப்பகுதி விவசாயிகள் விசனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவை அபிவிருத்தி திணைக்களத்தினை தொடர்பு கொண்டு கேட்டபொழுதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய், புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்கட்டு கமநல சேவை நிலையங்கள் இறுதி யுத்தத்தில் முற்றாகச் சேமடைந்தன.

இந்நிலையில் உடையார்கட்டு கமநல சேவை நிலையத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 11.7மில்லியன் ரூபா செலவில் சேவை நிலையமும், உரக்களஞ்சியமும் அமைக்கப்பட்டன.

மேலும் புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்தின் உரக்களஞ்சியம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 3.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையத்தினை மீண்டும் அமைப்பதற்கு 9 மில்லியன் ரூபா நிதி வேண்டும் என நாம் ஆராய்ந்துள்ளோம். அதற்கான நிதி கிடைக்கப்பெறுமிடத்து அதன் கட்டிடப் பணிகள் ஆரம்பிக்கப்படுமென அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .