2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குழுச்சண்டையில் ஈடுபட்ட 11 பேர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 28 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.புத்தூர் கிழக்குப் பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற குழுச் சண்டையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அதேயிடத்தினைச் சேர்ந்த 11 சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (27)  கைதுசெய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஊர்வலம் ஒன்றில் வெடிகொழுத்திப் போட்டமை தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் சண்டை இடம்பெற்றது.

இதில் 9 பேர் காயமடைந்து பருத்தித்துறை, மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வந்த அச்சுவேலிப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை(27) 11 பேரைக் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி 11 சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .