2025 ஜூலை 09, புதன்கிழமை

தாய்க்கு எதிராக 13 வயது மகள் முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் தனது தாயார் மீது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

தன்னை தனது தாயார் பாடசாலைக்குச் செல்லவிடாமல் வேலைக்குச் செல்லும்படி அடித்து விரட்டுவதாக அச்சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைக்காக தாயாரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த போதும் அவர் வருகை தரவில்லை.

இந்நிலையில், சிறுமி பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியை யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .