2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இலங்கை பொலிஸின் 146 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


இலங்கை பொலிஸின் 146ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று சனிக்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஹேமந்த அதிகாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பொலிஸின் அனைத்து பிரிவினரையும் சேர்ந்தோர் நகர வீதி வழியாக அணிவகுப்பாக சென்றதுடன் பல்வேறு வழிப்புணர்வை தாங்கிய பதாதைகளையும் தாங்கி சென்றிருந்தனர்.

இதன்பொது பொதுமக்கள், வர்த்தக சமூகத்தினர், முச்சக்கர வண்டி சாரதிகள் உட்பட பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதனை அடுத்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் பொலிஸ் தினத்தை முன்னிட்டு கூட்டமும் இடம்பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X