2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.குடாநாட்டுக் கடற்றொழிலாளர்களுக்கு 2ஆம் கட்ட எரிபொருள் மானியம் வழங்கல்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.குடாநாட்டுக் கடற்றொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்ட எரிபொருள் மானியம் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் என்.கணேகசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விதம் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட கடற்றொழில் சமூகத்தினருக்கு எரிபொருள் மானியத்தை கடற்றொழில் நீரியல் வள அமைச்சு வழங்கி வருகின்றது.

முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இரண்டாம் கட்டப்பணிகளுக்கான எரிபொருள் மானிய முத்திரைகளி எதிர்வரும் 16ஆம் திகதி முதல் யாழ்.மாவட்டக் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

எனவே இரண்டாம் கட்ட எரிபொருள் மானிய முத்திரையைப் பெற்றுக் கொள்வதற்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு வருகை கடற்றொழில் சங்கங்கள் மூலம் வருகை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .