2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கிணற்றுள் விழுந்த 4 வயது சிறுவன் பலி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 26 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

மழை நீர் தேங்கி நின்ற கிணற்றுள் விழுந்த 4 வயது சிறுவன்ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று  நாவாந்துறை, கமால் வீதி பகுதியில் இன்று மதியம் 2 மணியவில் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த சுமந்தன் பபிசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் தாயார் கணவருக்கு சாப்பாடு கொடுப்பதற்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற வேளையில், வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றடிக்கு சென்ற சிறுவன் வாளியை கிணற்றுக்குள் போட முற்பட்டுள்ளான். இதன்போது வாளிக் கயிறு அவன் மீது சுற்றப்பட்ட நிலையில் அவன் கயிற்றினால் இழுபட்ட நிலையில் கிணற்றில் விழுந்துள்ளான்.
 
யாழ்ப்பாணத்தில் மழை காலம் ஆரம்பித்துள்ளதால் கிணற்றில் மழை நீர் நிறைந்து காணப்பட்டுள்ளது. அதனால் கிணற்றுள் விழுந்த சிறுவன் மூச்சு திணறி இறந்துள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.உதயசிறி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X