2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விவசாயதுறை பட்டதாரிகள் 50 பேருக்கு ஆட்சேர்ப்பு நியமனம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 04 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்த தங்கராசா

யாழ். மாவட்ட விவசாய துறை பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பு நியமனம் வழங்கப்பட்டது. யாழ். நல்லூர் பிரதேச செயலகத்தில் நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில் நந்தனன் தலைமையில் நேற்று வியாழக்இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில், விவசாயதுறை பட்டதாரிகள் 50 பேருக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் ஆகியோர் நியமனங்களை வழங்கி வைத்தனர்.

யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகத்திற்கும் 3 பட்டதாரிகள் வீதம் நியமிக்கப்படவுள்ளதுடன்,  ஏனைய 5 பட்டதாரிகளும் யாழ். மாவட்ட செயலகத்திற்கு நியமிக்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் கூறினார்.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி லோகேஸ்வரன், மற்றும் யாழ். மாவட்ட திட்டப் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X