2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52பேர் கௌரவிப்பு

Menaka Mookandi   / 2014 மே 21 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

உலக நாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்படத்தில் கொண்டாடவுள்ள சர்வதேச குருதிக் கொடையாளர் தினத்தில் யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 52 குருதிக் கொடையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

40 தடவைகளுக்கு மேல் குருதிக் கொடை செய்தோர், 10 தடவைகளுக்கு மேல் குருதிக் கொடை முகாமை ஒழுங்கு செய்தோர், குருதிக்கொடை முகாமில் ஒரே தடவையில் 200 பேருக்கு மேல் குருதிக்கொடை வழங்க ஒழுங்கு செய்தோர் ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்படவுள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பாகவுள்ள குருதி மாற்று வைத்திய நிபுணர் கே.சி.டி.செனவிரத்ன புதன்கிழமை (21) தெரிவித்தார்.

அத்துடன், 20 தடவைகளுக்கு மேல், 10 தடவைகளுக்கு மேல் குருதிக்கொடை செய்தவர்கள் யாழ் மாவட்டத்தில் 1,500 பேருக்கு மேல் உள்ளடங்குவதுடன், அவர்கள் ஜுன் 04 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து கௌரவிக்கப்படவுள்ளனர் என்று அவர் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .