2025 ஜூலை 07, திங்கட்கிழமை

திருட்டுக்களுடன் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பல் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 28 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன்; தொடர்புடையதாகக் கருதப்படும் 06 பேரைக்  கொண்ட கும்பலை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைதுசெய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேனவின் வழிகாட்டலில் அமைந்த பொலிஸ் குழுவினர் இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

நாவற்குழி, கொடிகாமம், வரணி, ஊர்காவற்றுறை, மானிப்பாய், அச்சுவேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபர்கள் வட்டுக்கோட்டை, சுன்னாகம், மானிப்பாய் மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிப்பதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து  திருடப்பட்ட ஒருதொகுதி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .