2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 9 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும்  9 பேர் நேற்று வியாழக்கிழமை  இரவு கைதுசெய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார் இன்று  வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

நேற்றையதினம்  மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும்  25 இற்கும் மேற்பட்டவர்கள் பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, உரிய அடையாளங்களை நிரூபிக்கத் தவறியவர்களும் இரவில் நடமாடியமைக்கான நியாயமான  காரணத்தை தெரிவிக்காதவர்களுமாக 9 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மிகுதிப் பேர் விடுவிக்கப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .