2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 10 வீதமானவர்கள் நீரிழிவுநோயால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 24 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டின் சனத்தொகையில் 10 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரியின் நீரிழிவு பிரிவு போதனாசிரியர் வைத்தியர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நீரிழிவு தொடர்பாக யாழ். மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களுக்கும் தாதியர்களுக்குமான விழிப்புணர்வூட்டும்  கலந்தாய்வரங்கு யாழ். நூலகத்தில் இன்று வியாழக்கிமை நடைபெற்றது.  இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கும் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ். மாவட்டத்தில் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு  போதுமானதாக இல்லை. அதன் அவசியம் உணரப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தொடர்பான செயற்பாடுகள் துரிதப்படுத்த வேண்டிய தேவைகள் தற்காலத்தில் எழுந்துள்ளது.

மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மாற்றமடைவதன் காரணமாக பாரிய பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். நீரிழிவுநோய் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு போதிய வளங்கள் யாழ். மாவட்டத்தில் இல்லை

யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு இல்லாவிட்டல் யாழ். சனத்தொகையில் 10 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .