2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்கான முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: பொ.நா. பிரதிநிதிகள்

Kogilavani   / 2013 நவம்பர் 14 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

'யுத்தம் நடந்த முடிவுற்ற நாடுகளில் விரைவான அபிவிருத்தி இடம்பெற்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வழமைக்கு திரும்புவது  உலக நாடுகளிலுள்ள வழமையான செயற்பாடாகும்.  ஆனாலும், இலங்கையில் அவ்வாறான செயற்பாடுகள் காணப்படவில்லையென்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கவில்லை' என பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் புதன்கிழமை (13) இரவு யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் தங்கினர். தமது வருகை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், 'வடபகுதிக்கு புதன்கிழமை (13) விஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலமைகளை பார்வையிட்டோம். குறிப்பாக கிளிநொச்சி பகுதிக்குச் சென்று செஞ்சோலை சிறுவர் இல்லம் மற்றும் சிவில் பாதுகாப்புச் செயலகத்தில் பணிபுரியும் பெண்கள் ஆகியோருடன் கலந்துரையாடினோம்.

அதன்போது தங்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இருக்கவில்லை என அப்பெண்கள் எமக்குத் தெரிவித்தனர். தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு வேலைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக அவர் எமக்கு விளக்கமளித்தார்.

கிளிநொச்சியில் சில பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தெரிவித்த போதும், பெருமளவானவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மொழி ஒரு பிரச்சனையாகவிருந்தது. யுத்தம் நடந்த முடிவுற்ற நாடுகளில் விரைவான அபிவிருத்தி இடம்பெற்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வழமைக்கு திரும்புவது  உலக நாடுகளிலுள்ள வழமையான செயற்பாடாகும்.

ஆனாலும், இலங்கையில் அவ்வாறான செயற்பாடுகள் காணப்படவில்லையென்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கவில்லை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் போன்று இன்னும் 10 மடங்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தால்  மட்டுமே மக்கள் நல்ல நிலைக்குத் திரும்பமுடியும்

இம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய மற்றும் மேற்குலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 14 November 2013 03:36 PM

    ஐய்யாமாரே... அப்படி சொல்ல கூடாது, நாங்கள் பாதிக்க பட்டவர்களுக்கு வீதி அமைத்து கொடுத்துள்ளோம், விமான நிலையம், துறைமுகம், பெரியபெரிய கட்டிடங்கள் எல்லாம் அமைத்து கொடுத்துள்ளோம், இதை விட இன்னும் செய்ய வேண்டுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .