2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழ். சென்ற பஸ் கன்டர் வாகனத்துடன் மோதல்; 10இற்கும் அதிகமானவர்கள் காயம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 09 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டர்ரக வாகனத்துடன் மோதியதில் பத்திற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொக்காவில் பகுதிக்கு அருகில்  நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் அம்பீயுலன்ஸ் வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதாக அவ்வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X