2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். சாவகச்சேரியில் திங்கட்கிழமை (30)  குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள  மரமொன்றிலிருந்த குளவிக்கூடு திடீரெனக் கலைந்தது. இந்த நிலையில் வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளிகள், நோயாளிகளை பார்வையிட வந்தவர்கள்  குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில்; வயதானவர்களும்  சிறுவர்களும் அடங்குவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .