2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வடமாகாண அஞ்சல் சேவையில் 10,355 மில்லியன் ரூபா வருமானம்

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண அஞ்சல் திணைக்களம் 10,355 மில்லியன் ரூபா வருமானத்தினை கடந்த வருடத்தில் ஈட்டியுள்ளதாக வடமாகாண அஞ்சல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் அஞ்சல் திணைக்களம் தனது சேவையினை விஸ்தரித்த நிலையில், மின்பட்டியல் கட்டணமாக 604 மில்லியன் ரூபாவும் வெஸ்ரன் யூனியன் பணப்பரிமாற்றத்தின் மூலம் 12 மில்லியன் ரூபாவும் காசுக்கட்டளையின் மூலம் 6 மில்லியன் ரூபாவினையும் துரித தபால் சேவையின் மூலம் 22 மில்லியன் ரூபாவினையும் முத்திரை விற்பனையின் மூலம் 391 மில்லியன் ரூபா வருமானத்தினையும் பெற்றுள்ளதாக வடமாகாண அஞ்சல் திணைக்கள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X