2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

11 கைக்குண்டுகளும் துப்பாக்கி ரவைகளும் மீட்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 07 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். கொடிகாமம் மற்றும் கோப்பாய் பிரதேசங்களிலிருந்து  11 கைக்குண்டுகளும் துப்பாக்கி ரவைகளும்  நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

கொடிகாமம் புகையிரத வீதியில் உள்ள காணி ஒன்றின் பாழடைந்த கிணற்றிலிருந்து 10 கைக்குண்டுகளையும்;  துப்பாக்கி ரவைகளையும்  கொடிகாமம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, கோப்பாய் மத்தி மாரியம்மன் வீதியில் உள்ள பற்றைக்காணி ஒன்றிலிருந்து  கைக்குண்டு ஒன்றை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .