2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக 11 சிற்றூழியர்கள் நியமனம்

Super User   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக 11 சிற்றூழியர்களை சுகாதார அமைச்சு நியமித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் 11 சிற்றூழியர்களை சுகாதார அமைச்சு நியமித்துள்ளதாகவும் இவர்கள் இம்மாதம் 16ஆம் திகதி முதல் கடமையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து  ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருவதுடன், இவற்றினை நிவர்த்தி செய்ய இன்னும் காலம் எடுக்குமெனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .