2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினம் அனுஷ்டிப்பு

Super User   / 2011 நவம்பர் 08 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். குருநகரிலுள்ள அவரது சிலைக்கு இன்று செவ்வாய்க்க்கிழமை மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி,  இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்போடு அரசியல் நடத்திய மாமேதை பொன்னம்பலம் தமிழர்களின் இதயங்களிலிருந்து என்றும் நிங்காதவர்
தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு உயிரோட்டமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது அரசியல் பயணத்தில் உறுதியாக இருந்தார் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சலமோன் சிறில், யாழ். மாநாகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X