Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 22 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்படாத 124 '49 சி.சி' மோட்டார் சைக்கிள்கள் நேற்று திங்கட்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமையக பதில் பொறுப்பதிகாரி எஸ்.குணசேகர தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் ஒருவருட காலத்திற்கு மேலாக பதிவு செய்யப்படாத 49 சி.சி மோட்டார் சைக்கிள்களை உடனடியாகப் பதிவு செய்யுமாறும், பதிவினை மேற்கொள்ளாது பயணிக்கும் 49 சி.சி மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்து சட்ட விதியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
49 சி.சி மோட்டார் சைக்கிள்களை மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உடனடியாகப் பதிவினை மேற்கொண்டு அதற்குரிய இலக்கத் தகட்டினைப் பெறுமாறும் பதிவு மேற்கொள்ளாமல் வீதிக்கு வரும் 49 சி.சி மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Kethis Tuesday, 22 November 2011 10:38 PM
ஹெல்மட் போடுவதையும் கட்டாயமாக்குங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .