2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பளையில் விபத்து; 26 பேர் காயம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 06 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன், செல்வநாயகம் கபிலன், சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்திலிருந்து அரசாங்க உத்தியோகத்தர்களை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த  வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்திற்கு சொந்தமான பேரூந்து பளைப் பகுதியில் வியாழக்கிழமை (06) வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் 26 பேர் காயமடைந்ததாக பளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர் ஒருவர் மஞ்சள்கோட்டுக் கடவை ஊடாக  திடீரென வீதியை கடப்பதற்கு முற்பட்டபோது, பேரூந்துச் சாரதி நிலைகுலைந்த நிலையில் அங்கிருந்த  புடைவை மற்றும் தேநீர் கடைகளுடன் பேரூந்து மோதுண்டதாக பளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 14 படுகாயமடைந்த நிலையில்   03 பேர்  யாழ். போதனா வைத்தியசாலையிலும் 11 பேர் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிறு காயங்களுக்குள்ளான 12 பேர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. 

படுகாயமடைந்தவர்களில் வீதியை கடப்பதற்கு முற்பட்ட மாணவரான ஜெயசிங்கம் திவாகர் (வயது 13) என்பவரும் அடங்குகிறார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .