2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த 140 பயிற்சியாளர்கள் நாளை யாழ். பயணம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 03 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த 140 பயிற்சியாளர்கள் (கடேற்) தமது ஒரு மாதகால பயிற்சிநெறியை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு நாளை திங்கட்கிழமை வருகை தரவுள்ளனர்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில்  யாழ். செயலக மாநாட்டு மண்டபத்தில் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது. பின்னர் இவர்களுக்கு விருந்துபசாரமும் வழங்கப்படவுள்ளது.

இதில் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், யாழ்.  செயலக உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் பின்னர் இவர்கள் நெடுந்தீவு மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு தமது பயிற்சிகளைப் பெறவுள்ளனர்.  ஒரு மாதகாலத்திற்கு யாழ்ப்பாணத்தில் தங்கவுள்ள இவர்கள் கிராம அலுவலர் பிரிவுகளில் தங்கியிருந்து தமிழ்மொழியைக் கற்பதுடன்,   தமிழ் மக்களின் கலை கலாசாரப் பண்பாடுகள் பற்றியும் அறிந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X