2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பச்சிலைப்பள்ளியில் 16 குடும்பங்கள் மீளக்குடியமர்வு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 48பேர் இன்று மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். கச்சார் வெளி, அல்லிப்பளை ஆகிய கிராம அலுவர் பிரிவுகளைச் சேர்ந்தோரே இன்று மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இருந்த அழைத்துவரப்பட்டு புலோப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

பிரதேச செயலர் திரு.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற மீள் குடியேற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மீள்குடியேறும் மக்களுக்கான கூரைத்தகடு, மீள்குடியேற்ற நிதியுதவி, விவசாய உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் ஆகிய உதவிகளை வழங்கி சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலர், பளை பிரதேச மருத்துவமனைப் பொறுப்பதிகாரி, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைச் செயலர், பளைப் பிரதே இராணுவ அதிகாரி பிரிகேடியர் பெரேரா, கிராம அலுவலர்கள், கூட்டுறவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த அணியுடன் நலன்புரி முகாம்களில் இருந்த பளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதேச செயலர் திரு.முகுந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X