2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாணத்தில் 18 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகள்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன்

வடமாகாணத்தில் கடந்த 30 வருடங்களாக காணி உறுதிகள் வழங்கப்படாத 18 ஆயிரத்து 958 பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி காணி உறுதிகள் எதிர்வரும் 12ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வைத்து வழங்கப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 3886 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 3642 பேருக்கும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 7202 பேருக்கும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 4228 பேருக்கும் இந்த காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .