2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு 2000 பொலிஸார் கடமையில்: சமன் சிஹேர

Menaka Mookandi   / 2012 ஜூலை 31 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்.நல்லூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் வருகை தருவதினால் அவர்களின் உடமைகளைப் பாதுகாப்பதற்காகவும் கண்காணிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதற்காகவும் 2000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத் தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிஹேர - இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

யாழ்.நல்லூர் ஆலயச் சூழல் மற்றும் வீதிப் போக்குவரத்து கடமைகளுக்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நல்லூருக்கு வரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் தங்கள் உடமைகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரியுள்ளனர்.

நல்லூரில் 6 வீதிப் போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக 56 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X