Suganthini Ratnam / 2011 ஜூலை 15 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கடமையாற்றுவதற்கு வெளிமாவட்டத்திலிருந்து 210 அலுவலர்களின் பெயர் விபரங்கள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆ.கருணாநிதி இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி தேர்தலின்போது இனங்காணப்பட்ட ஒரு சில வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் கடமையாற்றுவதற்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் அலுவலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றுவரை வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 210 அலுவலர்களின் பெயர்கள் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மேலும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கடமைக்கு அழைக்கப்படலாம். இதுதவிர உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 35 சாதாரண வாக்கு எண்ணும் நிலையங்களும் 10 தபால் மூல வாக்களிப்பு எண்ணும் நிலையங்களும் கிளிநொச்சியில் 6 சாதாரண வாக்கு எண்ணும் நிலையங்களும் ஒரு தபால் மூலவாக்கு எண்ணும் நிலையமும் அமைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago