2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது; 22 சைக்கிள்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

சுன்னாகத்தில் இடம்பெற்ற பல்வேறு சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபரொருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

சுன்னாகம் இலங்கை வங்கிக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை இவர் திருடுவதற்கு முற்பட்டபோது, வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் மேற்;கொண்ட விசாரணையை தொடர்ந்து அவரிடமிருந்து 22 சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன், ஏற்கெனவே திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சைக்கிள்களின் விபரங்களின் அடிப்படையில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X