2025 மே 17, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தவர் கைது; 2400 போத்தல்கள் கைப்பற்றல்

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். கொக்குவில், பிடாரி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2400 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவரை, நாளை யாழ்.நீதிமன்ற நீதிவான் முன்லையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .